Rusia mengumumkan mendaftarkan vaksin Covid-19 pertama di dunia, dikenali Sputnik V. Foto: REUTERS
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மூத்த குடிமக்களும் சினோவேக் தடுப்பூசி பெற்றவர்களும் அவசியம் ஊக்கத் தடுப்பூசியை பெற வேண்டும்

ஷா ஆலம், டிச 16– சினோவேக் தடுப்பூசியைப் பெற்ற 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் ஊக்கத் தடுப்பூசியை பெற்றாக வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

குறிப்பாக, இரண்டு தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்ற 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் அக்காலக்கட்டத்திற்குள் ஊக்கத் தடுப்பூசியை பெறுவது அவசியமாகும் என்று அவர் சொன்னார்.

அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அத்தரப்பினர் ஊக்கத் தடுப்பூசியைப் பெறாவிட்டால் அவர்களின் தடுப்பூசி அந்தஸ்து முழுமை பெறாத நிலைக்கு மாற்றப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்களை பெறுவதற்குரிய தகுதியை அவர்கள் இழந்து விடுவர் என்றும் அவர் குறப்பிட்டார்.

தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு சினோவேக் தடுப்பூசியைப் பெற்றவர்கள் மற்றும் இதர அனைத்து விதமான தடுப்பூசியைப் பெற்ற 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்  அவசியம் ஊக்கத் தடுப்பூசியை பெற்றாக வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளதாக கைரி சொன்னார்.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்த பரிந்துரையை கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு பணிக்கு இம்மாதம் 8 ஆம் தேதி உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

ஃபைசர், சினோவேக் மற்றும் ஆஸ்ட்ராஸேனேகா ஆகிய தடுப்பூசிகளை ஊக்கத் தடுப்பூசிகளாக பயன்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை அனுமதி வழங்கியுள்ளது.


Pengarang :