ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBTSELANGOR

மக்கள் ஒற்றுமையே நமது பலம்-  கிறிஸ்துமஸ்  வாழ்த்து  செய்தியில் மந்திரி புசார் 

ஷா ஆலம் 25 டிச :-  சிலாங்கூர், சரவாக், சபா மற்றும் மலேசியா முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள்  அனைவருக்கும் எனது அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மகிழ்ச்சியளிக்கும் வேளை, நம்பிக்கை மற்றும் மரபுகளின் படி இவ்வேளையில் குடும்பங்கள் ஒன்றிணைகின்றன. கடினமான மற்றும் சவாலான ஆண்டிற்குப் பிறகு,  பழையதை நினைவு படுத்தும் பொன்னான தருணம். கிறிஸ்துமஸ் பண்டிகை.

கடந்த காலத்தைப் போலன்றி,  பலருக்கு வித்தியாசமாகவும் இருக்கலாம். அதற்கு பல்வேறு காரணங்களும் இருக்கலாம்.  கடந்த ஆண்டு இந்த வேளையில்  COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட்டம்,  அடுத்து மற்றொரு அலை பிறகு மீண்டும் ஒரு வைரஸ்.

 இந்த ஆண்டு, வார இறுதியில் நடந்த சோகம் குறைந்தது   37 குடும்பங்களை ஆழ்ந்த துயரத்தில் வீழ்த்தியது. இந்த நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தால் நாட்டில்  பலர் தங்கள் நேசத்திற்கு உரியவர்களை   இழந்துள்ளனர். கிட்டத்தட்ட 70,000 நபர்கள் வெளியேற்றப்பட வேண்டியிருந்தது. குறைந்தது 15,000 சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது.

                வலிமையான சிலாங்கூரைக் கட்டமைக்க

இதய துடிதுடிப்பை அதிகரிக்கும்,  மன வேதனையை தரும் சேதத்தை ஏற்படுத்தியது, ஆனால் அது நாம் ஊக்கத்தை இழக்க வழி விடக்கூடாது  இந்த சோகத்திலிருந்து மீள்வோம்.

இழப்பு ஏற்படுத்திய  வலியை  உணர்கிறோம்.   ஆனால் அதில்  மூழ்கி விடக்கூடாது.  மாறாக  துக்கம் நமது உறுதிப்பாட்டை,  நம்பிக்கையை வலுப்படுத்தும்  கோளாக  எடுத்துக்கொள்ள  வேண்டும்.

சில நபர்கள் மிக முக்கியமான தருணங்களில் பந்தை கை விட்ட நேரத்தில்,  சிலாங்கூரியர்களும் மலேசியர்களும் இந்த நாட்டின் தேவையின் போது ஒற்றுமையாக  எழுந்தனர்.

இளைஞர்கள், யுவதிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் சவால்மிக்க வேளையில் கைகோர்த்து   எழுவதைக் கண்டு எனக்கு நம்பிக்கை  மேலோங்குகிறது.

உணவு ஏற்பாடுகளை ஒன்றுபட்டு செய்தது,  நிவாரண மையங்களுக்கு ஆடைகள் அனுப்பியது,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களை கூட்டாக சுத்தம் செய்தது   போன்ற நிவாரண நடவடிக்கைகள்   நாம் முன்னெப்போதையும் விட  ஒன்றுபட்டு  இருக்கிறோம் என்பதை காட்டுகிறது.  

நெருக்கடியான தருணங்களில் மட்டுமின்றி,  நமது சமூக அல்லது அரசியல் தலைவர்கள் நமது ஒற்றுமையின் உறுதியை பொறுமையை சோதித்து பார்க்கும் சமயங்களில் கூட   நாம் ஒன்றுபட்டு  நிற்போம் என்பது எனது உண்மையான நம்பிக்கை. 

கடந்த கால சிலாங்கூரின், வலி மிகுந்த சோகத்தில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டோம். தற்போதைய மற்றும் எதிர்கால கால சவால்களை சிறப்பாக எதிர்கொள்ள மிகவும் ஆக்ககரமான நிலையை உருவாக்க உறுதியளிக்கிறேன். 

எங்களின் உடனடி முன்னுரிமை #SelangorBangkit   மூலம்   முடிந்தவரை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மக்களை   அவர்கள் வீடுகளுக்குத் திரும்ப செய்வதே ஆகும். உணவைத் தவிர, அடிப்படைத் தேவைகளுக்கு   இந்த வார தொடக்கத்தில் நான் அறிவித்த நடவடிக்கைகள்  தொடரும். 

விடுமுறை   நாட்களில் பயணம் செய்யும் நீங்கள்,    கோவிட்-19 வைரஸை கவனத்தில்  கொண்டு இன்னும் பொறுப்புடன்   பயணம் செய்வது   நலம். சுய பரிசோதனைகளை   தொடரவும்,   நிச்சயமற்ற   பிராந்திய வானிலைகள்    குறித்து   கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் உயிர், உடைமை பாதுகாப்புக்கு உள்ளூர் அதிகாரிகள், இருப்பிடங்களை காலி செய்யச் சொன்னால், அவர்களின் ஆலோசனை படி உடனே செயல்படுங்கள். 

இந்த   விடுமுறை   காலத்தில்   உங்கள்  அன்புக்குரியவர்களுடன்   பொன்னான நேரத்தைச் செலவிடும் வாய்ப்பையும் பண்டிகைகளையும் அனுபவிக்க. உங்கள் அனைவருக்கும் எனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி டத்தோ மந்திரி புசார் சிலாங்கூர்


Pengarang :