ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 97.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், டிச 24 - நாட்டில் நேற்று வரை  2 கோடியே 28 லட்சத்து 31 ஆயிரத்து 577  பெரியவர்கள் அல்லது  97.5 விழுக்காட்டினர்கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 98.8 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 31 லட்சத்து 32 ஆயிரத்து 540 பேர் குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதனிடையே, 12 முதல் 17 வயதிற்குட்பட்ட இளையோரில் 87.1 சதவீதம் அல்லது 27 லட்சத்து 42 ஆயிரத்து 885 பேர்  தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ள வேளையில்  28 லட்சத்து 38 ஆயிரத்து 825 பேர் அல்லது 90.1 விழுக்காட்டினர்  குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்று176,463 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதில் 5,275 பேர்  இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும்  3,504  பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும்பெற்றனர். எஞ்சியவை ஊக்கத் தடுப்பூசிகளாகும்.

 தேசிய கோவிட்-19 நோய்த் தடுப்பூசித் திட்டத்தின்  கீழ் வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை  5 கோடியே 65 லட்சத்து 76 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது.

Pengarang :