Yang di-Pertuan Agong Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah diiringi oleh Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari menyantuni mangsa banjir di Taman Sri Muda, Seksyen 25, Shah Alam pada 25 Disember 2021. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் சந்தித்தார்

ஷா ஆலம், டிச 25- இங்குள்ள சியாஸ்ட் தொழில்பயிற்சி மையத்தில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் தங்கியுள்ளவர்களை மாட்சிமை தங்கிய பேரரசர் இன்று சந்தித்தார்.

நான்கு சக்கர இயக்க வாகனத்தை சொந்தமாக ஓட்டிக் கொண்டு காலை 9.50 மணியளவில் இந்த மையத்திற்கு வந்த பேரரசர் அல்-சுல்தான் ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா அவர்களை சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமீர் ஷா வரவேற்றார்.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, ஆயுதப்படைகளின் தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ அப்பாண்டி புவாங், நிதியமைச்சர் டத்தோஸ்ரீ ஜப்ருள் துங்கு அப்துல் அஜிஸ் ஆகியோரும் மாமன்னரை வரவேற்க திரண்டிருந்தனர்.

வெள்ள நிலவரம் தொடர்பில் கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது பைசால் மாமன்னருக்கு விளக்கமளித்தார்.

மாமன்னர் அவர்கள் சுமார் ஒரு மணி நேரத்தை அந்த மையத்தில் செலவிட்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடியதோடு அவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் உதவிகளையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தாமான் ஸ்ரீ மூடா பள்ளிவாசலில் தங்கியுள்ளவர்களை மாமன்னர் சென்று கண்டார். கடந்த 18 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக தாமான் ஸ்ரீ மூடா விளங்குகிறது


Pengarang :