ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONALPBT

பெட்டாலிங் ஜெயா குருத்வாரா சாஹிப் ஆலயத்திற்கு எம்.பி.ஐ. உணவுப் பொருள்கள் அன்பளிப்பு

ஷா ஆலம், டிச 26- பெட்டாலிங் ஜெயா, குருத்வாரா சாஹிப் சீக்கிய ஆலயத்திற்கு எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கியது.

அந்த மையத்திற்கு 2,400 பால் டின்களும் 1,200 உடனடி மீ பொட்டலங்களும் வழங்கப்பட்டதாக எம்.பி.ஐ. நிறுவன சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது ஜைனால் நோர் கூறினார்.

அவ்விரு உணவுப் பொருள்களின் பற்றாக்குறையை தாங்கள் எதிர்நோக்குவதாக தாஷ்னி சுகுமாறன் என்பவர் தனது டிவிட்டர் பதிவின் வழி கூறியதைத் தொடர்ந்து இந்த உதவிப் பொருள்கள் உடனடியாக அனுப்பப்பட்டதாக அவர் சொன்னார்.

இதனிடையே, எம்.பி.ஐ. வழங்கிய இந்த உதவிக்கு தஷ்னி தனது டிவிட்டர் பதிவில் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த உதவியின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை தொடர முடியும் என அவர் நம்பிக்கைத்  தெரிவித்தார்.


Pengarang :