ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு நேற்று 2,897 பேர் பாதிப்பு

கோலாலம்பூர், டிச 29- கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று சற்று அதிகரித்து 2,897 ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 2,757 ஆக இருந்தது.

இந்த புதிய தொற்றுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 46 ஆயிரத்து 833 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

புதிய தொற்றுகளில் 50 விழுக்காடு அதிக பாதிப்பைக் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்றும் எஞ்சியவை லேசான தாக்கம் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்றும் அவர் சொன்னார்.

தினசரி கோவிட்-19 சம்பவங்களில் 2,705 உள்ளூரில் பரவிய வேளையில் 192 சம்பவங்கள் வெள்நாடுகளிலிருந்து வந்தவர்களிடம் கண்டறியப்பட்டன. 302 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் 169 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

நேற்று 3,434 பேர் கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதன் வழி இந்நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 73 ஆயிரத்து 084 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று புதிதாக 4 நோய்த் தொற்று மையங்கள் கண்டறியப்பட்ட வேளையில் இதனுடன் சேர்த்து மொத்த தொற்று மையங்களின் எண்ணிக்கை 226 ஆக அதிகரித்துள்ளது.

 


Pengarang :