ALAM SEKITAR & CUACAEKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

நேற்றிரவு வரை 45,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டன- 5 ஊராட்சி மன்றப் பகுதிகளில் துப்புரவுப் பணி முற்றுப்பெற்றது

ஷா ஆலம், ஜன 5- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு ஊராட்சி மன்றப் பகுதிகளிலிருந்து நேற்று இரவு 9.00 மணி வரை 44,874.95 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்குபட்ட பகுதியில் மிக அதிகமாக அதாவது 19,040.50 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் கூறியது.

அதனைத் தொடர்ந்து சுபாங் ஜெயா மாநகர் மன்றப் பகுதியில் 7,957 டன் குப்பைகளும் கிள்ளான் நகராண்மை கழகப் பகுதியில் 6,760 டன் குப்பைகளும் அகற்றப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

மூன்று ஊராட்சி மன்றங்களில் 80 விழுக்காட்டிற்கும் மேல் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட துப்புரவுப் பணிகளின் அளவு ஷா ஆலம் மாநகர் மன்றப் பகுதியில் 85 விழுக்காடாகவும் சுபாங் ஜெயாவில் 87 விழுக்காடாகவும் கிள்ளானில் 90 விழுக்காடாகவும் உள்ளது.

இது தவிர பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம், சிப்பாங் நகராண்மைக் கழகம், காஜாங் நகராண்மைக் கழகம், கோல லங்காட் நகராண்மைக்  கழகம் மற்றும் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் ஆகிய ஊராட்சி மன்றப் பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி முழுமை பெற்றுள்ளது.


Pengarang :