இரண்டாம் கட்ட துப்புரவுப் பணியில் கிருமி ஒழிப்புக்கு முன்னுரிமை

ஷா ஆலம், ஜன 15- வெள்ளத்திற்கு பிந்தைய இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணியில் கிருமி ஒழிப்பு மற்றும் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மேண்ட் நிறுவனம் கூறியது.

வெள்ளத்திற்கு பின்னர் நோய்கள் பரவுவதை தடுப்பதற்கு ஏதுவாக கிருமிகளை ஒழிக்கும் பணியில் இ.எம். எனப்படும் நுண்உயிரியல் ஆக்கத் திறன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

கடந்த வாரம் பாடாங் ஜாவா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கிருமி நாசினி தெளிப்பு பணியை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  பார்வையிட்டார். வரும் திங்கள்கிழமை தொடங்கி இப்பணி இதரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அவர் சொன்னார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பதன் மூலம் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளவிருக்கிறோம் என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணி மூன்று மாதங்களில் முற்றுப் பெறும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :