ALAM SEKITAR & CUACAHEADERADMEDIA STATEMENTPBT

சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 150 குப்பைத் தொட்டிகள் விநியோகம்

ஷா ஆலம், ஜன 17- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சக்கரம் பொருத்தப்பட்ட 150 குப்பைத் தொட்டிகள் சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் வழங்கியுள்ளார்.

உலு லங்காட், கம்போங் பாங்கி குடியிருப்பாளர்களுக்கு கடந்த மாதம் 9 ஆம் தேதி இந்த குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டதாக தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹார் கூறினார்.

வெள்ளத்தில் குப்பைத் தொட்டிகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் குப்பைகளை போடுவதற்கு முறையான இடமின்றி கண்ட இடங்களில் குப்பைகள் வீசப்படும் பிரச்சனைக்குத் தீர்வு காணும் பொருட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த பிரச்னையைக் கருத்தில் கொண்டு அவ்வட்டார மக்களுக்கு குப்பைத் தோம்புகளை வழங்க முடிவு செய்தோம். இதன் மூலம் பொதுமக்கள் குப்பைகளை முறையாக இடத்தில் போடுவதையும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதையும் உறுதி செய்ய முடியும் என்றார் அவர்.

குறைந்த வருமானம் பெறும் தரப்பினரை இலக்காக கொண்டு இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பெக்காவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில மகளிர் சமூக நல அமைப்பு வழங்கிய 20 சமையல் எரிவாயும் கலங்கள் இக்கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு கடந்த 13 ஆம் தேதி வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.


Pengarang :