ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBT

ஷா ஆலமில் புயல்- கம்போங் பூங்கா ராயாவில் 13 வீடுகள் சேதம்

ஷா ஆலம், ஜன 28- ஷா ஆலம் வட்டாரத்தில் நேற்று வீசிய கடும் புயலில் இங்குள்ள செக்சன் 22, கம்போங் பூங்கா ராயாவில் 13 வீடுகள் கடுமையான சேதத்திற்குள்ளாயின.

நேற்று மாலை 5.15 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அப்பகுதியிலுள்ள வீடுகளின் கூரைகள் பெயர்ந்து பறந்து சென்றதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பகாருடின் மாட் தாயிப் கூறினார்.

இச்சம்பவத்தில் செக்சன் 13 இல் உள்ள பேரங்காடி ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் இருந்த எட்டு வாகனங்களும் சேதமுற்றதாக அவர் சொன்னார்.

மேலும், இங்குள்ள செக்சன் 13இல் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கூரை பலத்தக் காற்றில் பறந்து சென்றது தொடர்பில் தமது தரப்பு மாலை 6.50 மணியளவில் புகாரை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், இச்சம்பவங்களில் யாருக்கும் காயமோ உயிருட்சேதமோ ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :