ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சீனப்புத்தாண்டின் போது வாகன அதிகரிப்பை எதிர்கொள்ளத் தயாராவீர்- நெடுஞ்சாலை நிறுவனங்களுக்கு உத்தரவு

கோலாலம்பூர், ஜன 29- இம்மாதம் 28 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வார விடுமுறை மற்றும் சீனப்புத்தாண்டு காரணமாக நெடுஞ்சாலைகளில் வாகன எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியத்தை கருத்தில் கொண்டு உரிய முன்னேற்பாடுகளைச் செய்யும்படி அனைத்து ஒப்பந்த நிறுவனங்களையும் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (எல்.எல்.எம்.) பணித்துள்ளது.

இந்த பெருநாள் காலத்தில் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை 46 லட்சமாக உயரும் என மதிப்பிடப்படுவதன் அடிப்படையில் இந் உத்தரவை எல்.எல்.எம். பிறப்பித்துள்ளது.

அவசர காலப் பணிகள் தவிர்த்து இதர அனைத்து விதமான பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளும் நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படுவது இக்காலக்கட்டத்தில் நிறுத்தி வைக்கப்படும் என்று அந்த வாரியம் நேற்று அறிக்கை ஒன்றில் கூறியது.

அனைத்து நெடுஞ்சாலைகளிலும் உள்ள எல்லா டோல் சாவடிகளும் முழுமையாக செயல்படும் என்பதோடு நெரிசல் அதிகம் உள்ள  சாவடிகளில் கூடுதல் கட்டண வசூலிப்பு தடங்கள் ஏற்படுத்தப்படும் என்று அவ்வறிக்கை தெரிவித்தது.

எல்.எல்.எம். போக்குவரத்து மையம் 24 மணி நேரமும் செயல்படும். போக்குவரத்து நிலவங்கள் தொடர்பான தகவல்களை பொது மக்கள் 1-800-88-7752 என்ற எண்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

இது தவிர மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் பேஸ்புக் மற்றும் Twitter @LLMinfofraffic  என்ற டிவிட்டர் பக்கம் வாயிலாகவும் தகவல்களைப் பெறலாம்.


Pengarang :