ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALPBT

கிள்ளானில் வெள்ள நிதிக்கு 70,000 மனுக்கள்- மோசடியைக் தடுக்க விண்ணப்பங்கள் தீவிர ஆய்வு

ஷா ஆலம், ஜன 29- பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்திற்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேற்று வரை 70,000 விண்ணப்பங்களை கிள்ளான் மாவட்ட நில அலுவலகம் பெற்றுள்ளது.

சிலாங்கூர் அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகையோடு மத்திய அரசின் பந்துவான் வாங் ஏசான் நிதியையும் பெறுவதற்கு 44,000 விண்ணப்பங்கள் தகுதி படைத்துள்ளதாக கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது பைசால் அப்துல் ராஜி கூறினார்.

கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் நேற்று வரை சுமார் 14,000 குடும்பங்கள் உதவித் தொகையைப் பெற்றுள்ளன. வெள்ளத்தில் உறவுகளைப் பறிகொடுத்து 10,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்ற 6 குடும்பங்களும் இதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த உதவித் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி வெள்ளத்தில் பாதிக்கப்படாதவர்களும் பணம் பெற முயல்வதைத் தடுக்கும் வகையில் மனுக்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சில இடங்களில் ஒரே குடும்பத்திலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதையும் நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். வெள்ளத்தில் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே நிதியுதவி கிடைப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம் என்றார் அவர்.


Pengarang :