K.Tamilselvi, 46
ECONOMYMEDIA STATEMENTPBT

கோட்ட அற்ற RM 8 கோழி விற்பனை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை

ஶ்ரீ கெம்பாங்கான், 12 பிப்: சிலாங்கூர் மாநில ஆதரவில் மேற்கொள்ளப்படும் கோழி விற்பனையின் காலம் நீடிக்க படுவதுடன், சந்தைக்கு வழங்கும் கோழிகளின் கோட்டா எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும்.  இதனால் அதிகமான மக்கள் பலன்களைப் பெற முடியும் என்கிறார்கள் மக்கள்.

32 வயதான அப்துல் ஹசிக் யூசுப், கடந்த திங்கட்கிழமை இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டதில் இருந்து பலமுறை கோழிகளை மலிவான விலையில் வாங்கியதாக கூறினார்.

இருப்பினும், இன்று அதை வாங்குவதற்கு தனக்கு வாய்ப்பில்லை, ஏனென்றால் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், மலிவான விலையில் விற்கப்படும் கோழி நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டை அடைந்து விட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்ததாக கூறினார்.

“ஒருவேளை மாநில அரசு ஒதுக்கீட்டு வரம்பை அதிகரிக்க வேண்டும், இதனால் அதிகமான மக்கள் பயனடையலாம்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

46 வயதான இல்லத்தரசி கே.தமிழ்செல்வி, எஹ்சான் உணவு விலை தலையீடு திட்டத்தின் மூலம் மலிவான கோழி இறைச்சி விற்பனையானது மக்களின் சுமையை குறைக்க உதவுவதாக விவரித்தார்.

“உண்மையில், இந்த நேரத்தில் கோழி இறைச்சி தட்டுப்பாடை தவிர்க்க இதுபோன்ற முயற்சிகள் பொதுமக்களுக்கு உதவுகிறது என்றார்.

இறைச்சி கோழிகள் வாங்க சில நேரங்களில்  பல இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் சிலாங்கூர் அரசின் இத்திட்டத்தின் வழி அதற்கு அவசியம் ஏற்படவில்லை.

“அக்கா வீட்டுக்குப் போகணும் விரும்பியதால் இன்று மார்க்கெட்டுக்கு வந்தேன், மலிவு விலைக்கு வாங்க முடியலையே தவிர இறைச்சி கோழி கிடைப்பது சிரமம் இல்லை என்றார்.

53 வயதான ஹம்பலி மான், இந்த திட்டத்தை செயல்படுத்துவது நீட்டிக்கப்பட வேண்டும், ஏனெனில் இது மக்களின் அன்றாட தேவையாக உள்ளது.

இந்த சேவையின்  வழி விலை குறைந்தும் சந்தையில்  அதிகம் கோழிகளும்  கிடைப்பதற்கு உதவுகிறது

.”இந்த திட்டத்தை தொடர முடியும் என்று நான் நம்புகிறேன், மேலும் இந்த பிரச்சனையை அரசாங்கம் ஆய்வு செய்யும், இதனால் மக்களுக்கு சுமை ஏற்படாது,” என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் அரசாங்கம் கடந்த திங்கட்கிழமை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு ஒரு கிலோவிற்கு RM8 என்ற நிலையான உச்சவரம்பு விலையில் கோழியை விற்கிறது. 50,000 கோழிகளை உள்ளடக்கிய விற்பனை விஸ்மா பி கே பி எஸ் மற்றும் சிலாங்கூர் மொத்த விற்பனை சந்தை, ஶ்ரீ கெம்பாங்கன் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டதாக டத்தோ ‘மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஒரு மில்லியன் ரிங்கிட் நிதியை உள்ளடக்கிய எஹ்சான் உணவு விலை தலையீடு திட்டத்தின் மூலம் முன் முயற்சிக்கு வரவேற்பு இருந்தால், மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்  இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்  என்று கூறியிருந்தார்


Pengarang :