EVENTMEDIA STATEMENTSELANGOR

ஷா ஆலமில் பொங்கல் கலை, கலாசார விழா- திரளானோர் பங்கேற்பு

ஷா ஆலம், பிப் 12– பொங்கல் திருநாளை முன்னிட்டு இங்குள்ள செக்சன் 16, கென் ரிம்பா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கலை, கலாசார நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.

தோரணம் கட்டும் போட்டி

ஆலய நிர்வாகத்தின் ஆதரவுடன் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 5வது பிரிவு இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

இவ்விழாவில் கோலமிடுதல், தோரணம் கட்டுதல், மட்டைப் பின்னுதல், பொங்கலிடுதல் மலர் தொடுத்தல் ஆகிய நிகழ்வுகளோடு சிறார்களுக்கு வர்ணம் தீட்டுதல்,  மாறுவேடப் போட்டியும் நடைபெற்றன.

வட்டார மக்களிடையே அணுக்கமான ஒத்துழைப்பை வளர்க்கும் அதே வேளையில் பாரம்பரிய கலைகளை தொடர்ந்து கட்டிக் காக்கும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினருமான எஸ்.பி. சரவணன் கூறினார்.

வர்ணம் தீட்டும் போட்டியில் வெற்றி பெற்ற சிறார்களுக்கு பரிசு வழங்குதல்

இங்கு நடத்தப்பட்ட நமது பண்பாடு சார்ந்த பத்து விதமான போட்டிகளில் சுற்று வட்டார மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்றார் அவர்.

கலாசாரப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சி என இரு பிரிவுகளாக நடத்தப்படும் இவ்விழாவுக்கு தாங்கள் சுமார் 15,000 வெள்ளியைத்  செலவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்விழாவின் தொடர்ச்சியாக இன்றிரவு கலை நிகழச்சி நடைபெவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு இந்நிகழ்வில் எஸ்.ஓ.பி.விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


Pengarang :