ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSUKANKINI

எதிரணியைக் குறைத்து எடைபோடக்கூடாது சுயப் பலவீனங்களைக் களைய வேண்டும்.

ஷா ஆலம், பிப் 17: தேசிய ஒற்றையர் வீரர் கோ ஜிங் ஹாங் இன்று மதியம் 2022 ஆசிய அணி பூப்பந்து போட்டியில் (BATC) எளிதாக வென்ற போதிலும். சுயப் பலவீனங்களைச் சரிசெய்து அடுத்த ஆட்டத்தில் வலிமையைக் காண்பதில் உறுதியாக இருக்கிறார்.

கஜகஸ்தானின் தஜிபுல்லாயேவ் மக்ஷுத்தை 21-8, 21-4 என்ற கணக்கில் வீழ்த்திய 20 வயது வீரர், இன்றைய போட்டியில் பங்குபெறத் தனக்கு வாய்ப்பளித்த மலேசியாவின் பூப்பந்து சங்கத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். எதிரணியினரை ஏளனமாகப் பார்க்காமல், தனது திறமைகளை மேம்படுத்த முயற்சிக்கிறேன் என்றார் .

“இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது, நான் இன்னும் எனது சொந்தக் குறைபாடுகளையும் பலங்களையும் உணரவேண்டும். அடுத்த போட்டியில் எங்களால் முடிந்ததைச் செய்வோம் என்று நம்புகிறேன்,” என்றார்.

இதற்கிடையில்,இரட்டையர்களான மான் வெய் சோங் மற்றும் டீ காய் வுன் ஆகியோர் ஆதரவாளர்களின் ஆரவாரம் எதிரணியினரை எதிர்கொள்ள உற்சாகப்படுத்தியதாகக் கூறினர்.

“எதிரிகளின் பலவீனங்கள் என்னவென்று எங்களுக்குத் தெரியாது, முன்பு முன்னிலை படுத்தப்பட்டது எங்களின் கூட்டு முயற்சிகள் மற்றும் பார்வையாளர்களின் ஆதரவு, அனைத்திற்கும் நன்றி” என்று வெய் சோங் கூறினார்.

கஜகஸ்தானை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்ததன் வழி மலேசிய ஆண்கள் அணி BATC 2022 இன் அரையிறுதிக்குத் தனது இடத்தை உறுதி செய்தது, அவர்கள் மற்றும் குழுவின் இறுதி ஆட்டத்தில் நாளை மாலை 4 மணிக்கு ஜப்பானை எதிர்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

 


Pengarang :