ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

613 சட்டவிரோதத் துணை தொலைத்தொடர்பு கோபுரங்கள் மீது அமலாக்க நடவடிக்கை

ஷா ஆலம், மார்ச் 16: மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக உரிமம் பெறாத தொலைத்தொடர்பு கோபுரங்களின்  உரிமையாளர்கள் 613 பேர் மீது ஊராட்ச்சி மன்றம், அமலாக்க நடவடிக்கை எடுக்கும் என்று மாநில அரசு கூறியது.

மாநில அரசு ஆண்டுக்கு RM12 லட்சம் வருவாயை இழப்பதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அரசு ஆட்சிக்குழு இங் ஸீ ஹான் கூறினார்.

5ஜி தொழில் நுட்பத்தின் வருகைக்கு ஆதரவளிக்கும்   ரீதியில் மாநில அரசின் நடவடிக்கைகள் இருப்பதை உறுதி செய்வதற்காகப் பிப்ரவரி 14 அன்று ஒரு சந்திப்பு கூட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

“சட்டவிரோதத் தொலைத்தொடர்பு கோபுரங்களின் உரிமையாளர்கள் மீது அனைத்து உள்ளூர் அதிகாரிகளும் அகற்றுவதற்கான அறிவிப்புகளை வெளியிடுவதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.  ஊராச்சிமன்றங்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அனுமதிகளைப் புதுப்பிக்க வேண்டாம்” என்று அவர் இன்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் கூறினார்.

பாலாகோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கியின் கேள்விக்குப் பதிலளித்த ஸீ ஹான், சட்டம் 133 (சாலைகள், வடிகால் மற்றும் கட்டிடங்கள் சட்டம் 1974) மற்றும் சட்டம் 172 (நகரம் மற்றும் நாடு திட்டமிடல் சட்டம் 1976) போன்ற சட்ட விதிகளின்படி உள்ளூர் அதிகாரிகள் அறிவிப்புகளை வெளியிடலாம் என்றார்.

“கட்டமைப்பின் உரிமையாளர் அபராதத்தைச் செலுத்த மறுத்தால், கட்டமைப்பு மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சட்டவிரோதத் துணை தொலைத்தொடர்பு கோபுரங்களின் எண்ணிக்கையையும் அவர் பின்வருமாறு விவரித்தார்:

 

  1. கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில் – 172
  2. செலாயாங் முனிசிபல் கவுன்சில் – 111
  3. காஜாங் முனிசிபல் கவுன்சில் – 77
  4. சிப்பாங் முனிசிபல் கவுன்சில் – 63
  5. பெட்டாலிங் ஜெயா நகரச் சபை – 42
  6. சுபாங் ஜெயா நகரச் சபை – 42
  7. ஷா ஆலம் நகரச் சபை – 36
  8. அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் – 35
  9. உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் – 19
  10. கோலா சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் – 7
  11. கிள்ளான் முனிசிபல் கவுன்சில் – 5
  12. சபா பெர்ணாம் மாவட்டக் கவுன்சில் – 4

Pengarang :