ECONOMYHEALTHNATIONALSELANGOR

சிலாங்கூரில் மார்ச் 5 வரை 4,211 டிங்கி சம்பவங்கள் பதிவு- டாக்டர் சித்தி மரியா தகவல்

ஷா ஆலம், மார்ச் 18- இவ்வாண்டு மார்ச் 5 ஆம் தேதி வரையிலான 9 நோய்த் தொற்று வாரங்களில் சிலாங்கூரில் 4,211 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்தாண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 35.9 விழுக்காடு அதிகமாகும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் டிங்கி காய்ச்சல் கண்டவர்களின் எண்ணிக்கை 3,099 ஆகவும்  ஆண்டு முழுவதும் 15,741 ஆகவும் பதிவானது என்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

கடந்த 2021 மற்றும் 2022 இல் சிலாங்கூரில் பதிவான டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை மற்றும் டிங்கியை எதிர்கொள்வதில் வூல்பசியா பாதிப்புக்கு உள்ளான கொசுக்களின் ஆக்கத் திறன் குறித்து கோல குபு பாரு உறுப்பினர் லீ கீ ஹியோங் கேள்வியெழுப்பியிருந்தார்.

லீ இன்று சட்டமன்றத்திற்கு வர முடியாத நிலையில் அவரின் கேள்வியை சுபாங் ஜெயா உறுப்பினர் மிஷில் இங் மே ஸி எழுப்பினார்.

கோம்பாக் மற்றும் பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களில் டிங்கி நோயை கட்டுப்படுத்தும் உயிரியல் கட்டுப்பாட்டு வடிவமாக பூல்பாசியா பாதிப்புக்குள்ளான ஏசிஸ் கொசுக்கள் பயன்படுத்தப்படுவதாக டாக்டர் சித்தி மரியா கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி கூறியிருந்தார்.

இதன் தொடர்பில் எட்டு பகுதிகள் ஐ.எம்.ஆர். எனப்படும் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :