ECONOMYPBTSELANGORSMART SELANGOR

ஸ்மார்ட் பார்க்கிங் செயலியை விரைந்து பதிவிறக்கம் செய்வீர்- சிலாங்கூர் மக்களுக்கு கோரிக்கை

ஷா ஆலம், மார்ச் 24 – வரும் ஏப்ரல் முதல் தேதி தொடங்கி சிலாங்கூர் மாநிலத்தில் அனைத்து கார் நிறுத்துமிட கட்டணங்களும் இலக்கவியல் முறைக்கு மாறுவதால் ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (எஸ்.எஸ்.பி.) மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யும்படி மாநில மக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.

இந்த மின்-கூப்பன் முறை எளிதானது என்பதோடு பணப்பரிமாற்றமும் பாதுகாப்பானது என்று ஸ்மார்ட் சிலாங்கூர் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

எஸ்.எஸ்.பி. செயலியை விரைந்து பதிவிறக்கம் செய்யுங்கள். நிச்சயமாக அது எளிதானது மற்றும் பாதுகாப்பானது என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிலாங்கூர் இ-கூப்பனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விளக்கப்படத்தையும் அது பேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளது.

மின் கூப்பன்களைப் பயன்படுத்துவதற்கான வழி முறைகள் பின்வருமாறு:

• எஸ்.எஸ்.பி செயலி மூலம் பார்க்கிங் கட்டணம் மற்றும் கிரெடிட் தொகை மதிப்பை கூட்டுங்கள் அல்லது;

• அருகிலுள்ள இ-கூப்பன் முகவர்கள் மூலம் பார்க்கிங் கட்டணத்தைச் செலுத்துங்கள் மற்றும்;

• 7-இலெவன், 99 ஸ்பீட்மார்ட் மற்றும் MyPOSpay மூலம் கிரடிட் தொகை மதிப்பை கூட்டலாம்.

மேல் விபரங்களுக்கு 1-700-81-9612 என்ற எண்களில் அல்லது  [email protected] எனும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

சிலாங்கூர் அரசு நடப்பிலுள்ள காகித கூப்பன்களின் பயன்பாட்டை படிப்படியாகக் குறைத்து மின்-கூப்பன் முறையை அமல் செய்யவிருக்கிறது. மின்-கூப்பன் வசதியை பயன்படுத்துவதற்கு ஏதுவாக எஸ்.எஸ்.பி செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.


Pengarang :