ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று 10,002  பேருக்கு கோவிட்-10 நோய்த் தொற்று- 28 பேர் உயிரிழப்பு

ஷா ஆலம், ஏப் 5- கோவிட்-19 நோய்த்தொற்று எண்ணிக்கை நேற்று 10,002 ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் பதிவானதை விட இந்த எண்ணிக்கை 2,378  குறைவாகும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

நோய் தொற்றிலிருந்து விடுபட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் நேற்று உயர்வு கண்டு 23,302 ஆக ஆனதாக அவர் கூறினார். இதன் வழி அந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்து 41 ஆயிரத்து 723 ஆகப் பதிவாகியுள்ளது என்றார்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 3,633 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 175,339 பேர் வீடுகளிலும் 422 பேர் பி.கே.ஆர்.சி. எனப்படும் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

.மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 0.79 விழுக்காடாக அல்லது 84 பேராக உள்ள வேளையில் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை 9,913 பேர் அல்லது 99.11 விழுக்காட்டினர் கொண்டுள்ளனர் என்றார் அவர்.

மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள 89 நோயாளிகளில் 31 பேர் அல்லது 34.83 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெறாதவர்கள் அல்லது  அறவே பெறாதவர்களாவர். மேலும் 34 பேர் அல்லது 38.20 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருக்கின்றனர்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பிரிவு வாரியாக வருமாறு-

பிரிவு 1- 5,495 சம்பவங்கள் ( 59.94 விழுக்காடு)
பிரிவு 2- 4,418 சம்பவங்கள் (44.17 விழுக்காடு)
பிரிவு 3- 30 சம்பவங்கள் (0.20 விழுக்காடு)
பிரிவு 4- 33 சம்பவங்கள் (0.33 விழுக்காடு)
பிரிவு 5- 26 சம்பவங்கள் (0.26 விழுக்காடு)

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு நேற்று 28 பேர் பலியாகினர். நேற்று புதிதாக நோய்த் தொற்று மையங்கள் பதிவாகாத நிலையில் தற்போது தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை தொடர்ந்து 173 ஆக இருந்து வருகிறது.


Pengarang :