ECONOMYNATIONAL

நாட்டின் பொருளாதாரம் இவ்வாண்டு 5.5 விழுக்காடு உயர்வு காணும்- உலக வங்கி கணிப்பு

கோலாலம்பூர், ஏப் 5- மலேசியாவின் பொருளாதாரம் இவ்வாண்டு 5.5 வளர்ச்சி காணும் என உலக வங்கி கணித்துள்ளது. உள்நாட்டு  தேவை மற்றும் விரிவாக்கம், நாட்டின் எல்லைகள் திறப்பு ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கும் என அது கூறியது.

மின்னியல், மின்சாரப் பொருள்கள் மற்றும் மருத்துவ ரப்பர் கையுறைகள் போன்ற வெளித் துறைகள் இந்த பொருளாதார வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் என்று அறிக்கை ஒன்றில் அவ்வங்கி தெரிவித்தது.

எனினும், ரஷிய-உக்ரேன் போர், அமெரிக்க பொருளாதார நிலை கடுமையாவது, சீனாவின் கட்டமைப்பு மந்தநிலை போன்ற காரணங்களால் இந்த வளர்ச்சி 4.8 விழுக்காடாக குறைவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

பொருளாதாரம் மீட்சியை நோக்கி பயணிக்கும் என கணிக்கப்பட்டாலும் கோவிட்-19 பெருந்தொற்று, உணவுப் பற்றாக்குறை, வெள்ளம் போன்ற பிரச்னைகள் ஏழைகள் மற்றும் உதவி தேவைப்படுவோரின் மேம்பாட்டில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் மதிப்பிடப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 3.1 விழுக்காடாக கணிக்கப்பட்ட வேளையில் இவ்வாண்டில் அதன் வளர்ச்சி 5.8 விழுக்காடாக இருக்கும் என்று உலக வங்கி கடந்தாண்டு கணித்திருந்தது.


Pengarang :