ECONOMYGALERINATIONALPBT

ஜோப்கேர் திட்டம் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைகளைப் பெற உதவியது

ஷா ஆலம், ஏப்.8: மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் நடைபெற்ற ஜோப்கேர் திட்டத்தில் பங்கேற்ற 700 நபர்களில் மொத்தம் 120 பேருக்கு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையில், பிப்ரவரி 25 முதல் மார்ச் 26 வரை கிள்ளான், உலு சிலாங்கூர் மற்றும் பெட்டாலிங்கில் சுமார் 80 பங்கேற்பாளர்கள் இரண்டாவது நேர்காணலில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்று சமூக-பொருளாதார மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

“அவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருமானம் பெறுபவர்கள், அவர்கள் உற்பத்தித் துறையில் வேலை செய்ய ஏற்றுக்கொள்ளப்பட்டு வேலைகளைத் தொடங்கியுள்ளனர்” என்று வீ.கணபதிராவ் கூறினார்.

சமூக பாதுகாப்பு அமைப்புடன் (சொக்சோ) இணைந்து சிலாங்கூர் பணியாளர் அதிகாரமளிக்கும் பிரிவு (யு.பி.பி.எஸ்.) முன்முயற்சி கோவிட்-19 தொற்றுநோயால் வேலை இழந்த நபர்களுக்கு புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது என்று கணபதிராவ் மேலும் கூறினார்.

“வேலை தேடுபவர்கள் மே முதல் ஜூன் வரை தொடரும் இன்னும் பல திட்டத் தொடர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நம்புகிறேன்.”முந்தைய மூன்று பகுதிகளில் கிடைத்த பதிலின் அடிப்படையில் ஒவ்வொரு திட்டத் தொடரிலும் 200 முதல் 250 நபர்கள் கலந்து கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.

பல்வேறு துறைகளில் உள்ள 15 உள்ளூர் நிறுவனங்களின் பங்கேற்புடன் ஜோப்கேர் திட்டம் மாநில மக்களுக்கு 3,000 வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.

ஆர்வமுள்ள நபர்கள் https://uppselangor.wixsite.com/my-site என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம்.

ஜோப்கேர் திட்டத்தின் இருப்பிடங்கள் மற்றும் அடுத்த தேதிகள் இங்கே உள்ளன

1- Petaling – Dewan Serbaguna Camelia Seksyen 10, Putra Height (7-8 Mei)
2. Sepang – Dewan Taman Gemilang, Dengkil (14 Mei)
3. Hulu Langat – Dewan Demesne (21 Mei)
4. Gombak – Dewan Taman Gombak (4 Jun)
5. Kuala Langat – Dewan Sri Jugra (18 Jun)
6. Sabak Bernam – Dewan Sri Bernam (25 Jun)

 


Pengarang :