ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

9,002 நோய்த்தொற்று சம்பவங்கள் மற்றும் மூன்று புதிய கிளஸ்டர்கள் நேற்று பதிவு செய்யப்பட்டன

ஷா ஆலம், ஏப்ரல் 13: கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று 10,000 க்கும் கீழே குறைந்து 9,002 சம்பவங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார தலைமை இயக்குநர் தெரிவித்தார்.

நேற்றைய நிலவரப்படி மொத்தம் 8,950 உள்ளூர் சம்பவங்கள் மற்றும் 52 இறக்குமதி சம்பவங்கள் என மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 4,306,193 ஆக உள்ளது என்று டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மொத்தம் 16,986 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்று வரை குணமடைந்த மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 4,180,763 ஆகும் என்றும் அவர் கூறினார்.

நேற்றைய நிலவரப்படி, 288 நபர்கள் கோவிட்-19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையத்தில் (பிகேஆர்சி) வைக்கப்பட்டுள்ளனர், 2,675 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர், அந்த எண்ணிக்கையில், தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) 54 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவையில்லை. அதே சமயம் 97 ICU நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவை,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

புத்ராஜெயா மற்றும் சிலாங்கூர் ICU படுக்கைகளின் பயன்பாட்டை முறையே 100 விழுக்காடு மற்றும் 51 விழுக்காடு அதிகமாகப் பதிவு செய்துள்ளன, அதே நேரத்தில் புத்ராஜெயா ICU அல்லாத படுக்கைகளில் 63 விழுக்காடு பதிவு செய்துள்ளது.

“நேற்று மொத்தம் 394 சம்பவங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன, மொத்தத்தில், 162 சம்பவங்கள் அல்லது 41.1 விழுக்காட்டினர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில்  உள்ளனர், மேலும் 232 சம்பவங்கள் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தில்  உள்ளனர் இருந்தன,” என்று அவர் கூறினார்.

தீவிரமான மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் 67 பேர் அல்லது 0.74 விழுக்காடு குறைவாகவே உள்ளனர், அறிகுறிகள் இல்லாத ஒன்றாம் மற்றும் லேசான அறிகுறிகள் கொண்ட இரண்டாம் கட்டப் பாதிப்பில் 8,935 சம்பவங்கள் அல்லது 99.26 விழுக்காடு என்று டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கட்டம் வாரியாக வருமாறு-

1 ஆம் கட்டம்: 4,759 சம்பவங்கள் (52.87 விழுக்காடு)

2 ஆம் கட்டம்: 4,176 சம்பவங்கள் (46.39 விழுக்காடு)

3 ஆம் கட்டம்: 26 சம்பவங்கள் (0.29 விழுக்காடு)

4 ஆம் கட்டம்: 20 சம்பவங்கள் (0.22 விழுக்காடு)

5 ஆம் கட்டம்: 21 சம்பவங்கள் (0.23 விழுக்காடு)

மருத்துவமனைக்கு வெளியே நிகழ்ந்த  ஆறு இறப்புகள் உட்பட நேற்று மொத்தம் 30 இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் நேற்று மூன்று புதிய கிளஸ்டர்கள் பதிவு செய்யப்பட்டன, நேற்றைய நிலவரப்படி செயலில் உள்ள மொத்த குழுக்களின் எண்ணிக்கையை 117 ஆகக் கொண்டு வந்தது.


Pengarang :