ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சிலாங்கூர் தொடர்ந்து தொழிலாளர்களின் திறன் மற்றும் ஆற்றலை மேம்படுத்தி வருகிறது

ஷா ஆலாம், 1 மே: சிலாங்கூர் தொழிலாளர்கள் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப அதிகத் திறன் கொண்டவர்களாகவும் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும்  தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

உற்பத்தி, சேவைகள், கட்டுமானம், சுகாதாரம் மற்றும் பிற துறைகளில் மாநிலத்தின் வளர்ச்சிக்கு 3.6 மில்லியன் தொழிலாளர்கள் முதுகெலும்பாக இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“இம்மாநில மக்கள் அனுபவிக்கும் பொருளாதாரச் செழுமை என்பது தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் ஆற்றலின் விளைவாகும். சிலாங்கூர் தொழிலாளர்கள் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப அதிகத் திறன் கொண்டவர்களாகவும் உயர்கின்றனர். அது அவர்களின் வருமானம் அதிகரிக்கவும் உதவுகிறது.

“சிலாங்கூர் மாநிலத் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையம் (STDC) முன்னேற்றத்திற்காகப் பணியாளர்களின் திறன்களைத் தீவிரமாகக் கூர்மைப்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றாகும்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பேஸ்புக்கில் தெரிவித்தார்.

சிலாங்கூர் தொழிலாளர் குடியிருப்பு வளாகத்தின் கட்டுமானம், தொழிலாளர்களுக்கான வீட்டு வசதிகளை வழங்குவதன் மூலம் தொழில்துறை தொழிலாளர்களின் மனித உரிமைகளையும் நிலைநிறுத்துவதாக அவர் கூறினார்.

“புதிய பொருளாதாரத் துறைகளை வலுப்படுத்துவதன் நன்மைகள் உணரப்படுகின்றன, அவை பரவலான கட்டத்தில் துடிப்புடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“கோவிட்-19 தொற்றுநோய்களின் போது பொருளாதாரத் தூண்டுதல் தொகுப்பு, தொற்று நோய் அபாயத்திலிருந்து மாநிலத்தை மீட்க எடுத்துக்கொண்ட சுகாதார முயற்சி மற்றும் தடுக்கும் (POIS) திட்டம், மக்கள் உணவு கூடை உதவி திட்டம் போன்ற பிற முயற்சிகளில் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது மாநில அரசின் கொள்கைகளாகும்,” என்று அவர் கூறினார்.

2019 ஆம் ஆண்டில் பணியாளர்களுக்கு தொழில்திறன் ஆற்றலை மேம்பாடு பயிற்சி நிறுவனத்தை நிறுவிய முதல் மாநிலமும் சிலாங்கூர் என்ற வரலாற்றையும் உருவாக்கியுள்ளது சிலாங்கூர், என்று தனது தொழிலாளர் தின வாழ்த்தில் மந்திரி புசார் அமிருடின் கூறினார்.


Pengarang :