ALAM SEKITAR & CUACAECONOMY

சியாவலின் போது கேடிஇபி கழிவு மேலாண்மை துறை  குப்பை அகற்றல் இடைவெளியைக் குறைத்தது

ஷா ஆலம், மே 10: ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பைத் தொடர்ந்து கேடிஇபி கழிவு மேலாண்மை (KDEBWM) இந்த மாதம்  குப்பை அகற்றல் இடைவெளியைக் குறைத்தது.

சியாவல் கொண்டாட்டத்திற்கு முன்பு வழக்கத்தை விடக் குப்பைகளின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் குடியிருப்பு பகுதிகளில் கவனம் செலுத்தப்படும் என்று அதன் நிர்வாக இயக்குனர் ரம்லி முகமட் தாஹிர் கூறினார்.

“பல்வேறு நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திறந்த இல்ல உபசரிப்பைத் தவிர ஹரி ராயா பெருநாளுக்கு  விருந்தினர்களின் வருகை குப்பை, பிளாஸ்டிக், உணவு கழிவுகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

” சுகாதாரப் பிரச்சினைகளையும் துர்நாற்றத்தை எதிர்நோக்காமல் இருக்கக் கேடிஇபி கழிவு மேலாண்மை அடிக்கடி கழிவுகளைச் சுத்தம் செய்யக் கட்டளையிடப் பட்டுள்ளது,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இதற்கிடையில், ஹரி ராயா பெருநாளுக்கு  முந்தைய வாரத்தில் கிட்டத்தட்ட 4,000 டன் மொத்தக் குப்பை சேகரிக்கப்பட்டதாக ரம்லி தெரிவித்தார்.

“பல குடியிருப்பாளர்கள் ஹரி ராயா பெருநாளுக்குத் தளவாடங்களை மாற்றுவதால் மொத்தக் கழிவுகளின் அளவு அதிகரித்து வருகிறது, அதனால் அதை நாம் நன்றாக நிர்வகிக்க வேண்டும், ”என்று அவர் கூறினார்.

சமீபத்தில் ஹரி ராயா பெருநாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, மாநில அரசின் துணை நிறுவனம், தளவாடங்கள் போன்ற கழிவுகளைக் குடியிருப்பாளர்களுக்கு எளிதாக அகற்றுவதற்காகச் சமூகத்திற்கு இலவச மொத்தக் குப்பை சேகரிப்பை வழங்கியது


Pengarang :