ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

தாசேக் ஆயர் ஹீத்தாம் சட்டவிரோத குப்பை கொட்டும் மையத்திற்கு செல்லும் வழி மூடப்பட்டது

ஷா ஆலம், ஜூன் 2- சட்டவிரோத குப்பை கொட்டும் மையமாகச் செயல்பட்ட பண்டார் மக்கோத்தா செராஸ், செக்சன் 5 இல் உள்ள ஏரி ஒன்றுக்கு செல்லும் வழியை காஜாங் நகராண்மை கழகம் மூடியுள்ளது.

நகராண்மைக் கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருவதாக அதன் பொது உறவு அதிகாரி கமாருள் இஸ்லான் சுலைமான் கூறினார்.

முன்பு சுரங்க நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட அந்த பகுதியை சீரமைப்பதற்கு ஏதுவாக அதன் உரிமையாளரை அடையாளம் காணும் நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அப்பகுதியில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் நடவடிக்கைகள் கடந்தாண்டு இறுதியில் அடையாளம் காணப்பட்டதாக கூறிய அவர், எனினும் கடந்த இரு மாதங்களாக அங்கு நிலைமை மோசமடைந்தது என்றார்.

கடந்த இரண்டு மாதங்களில் ஆறு லோரிகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு சட்டவிரோத குப்பைக் கொட்டும் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக அங்கு கண்காணிப்பு ப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.

முன்னதாக, “பிளேக் லேக்“ (கருப்பு ஏரி) என அழைக்கப்படும் பண்டார் மக்கோத்தாவில் அமைந்துள்ள அந்த ஏரியின் அவல நிலையை பேஸ்புக் பயனீட்டாளர் ஒருவர் தனது பதிவில் பகிர்ந்து கொண்டிருந்தார்.


Pengarang :