ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

ஆற்று நீரில் துர்நாற்றம்- காரணத்தைக் கண்டறிய லுவாஸ் விசாரணை

ஷா ஆலம், ஜூன் 10– பாங்கி செக்சன் 3 இல் உள்ள ஆற்று கண்காணிப்பு நிலையத்தில் டீசல் போன்ற துர்நாற்றம் நேற்று இரவு 11.15 மணியளவில் கண்டறியப்பட்டது தொடர்பில் லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் தகவல் பெற்றது.

இத்தகவலை  பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திடமிருந்து லுவாஸ் பெற்றதாக சுற்றுலா, சுற்றுச்சூழல் மற்றும் பசுமைத் தொழில்நுட்பத் துறைக்கான மாநில ஆட்சிக்கு குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம், ஆயர் சிலாங்கூர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அந்த துர்நாற்றத்திற்கான மூலகாரணத்தைக் கண்டறியும் முயற்சியில் லுவாஸ் ஈடுபட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த நீர் மாசுபாடு காரணமாக செமினி 2 நீர் சுத்திகரிப்பு மையம், புக்கிட் தம்போய் நீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் லபோஹான் டாகாங் சுத்திகரிப்பு மையம் ஆகியவை மூடப்படும் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக லுவாஸ் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு அவசரகால நீர் வள மாசுபாடு வழிகாட்டிற்கேற்ப மஞ்சள் குறியீட்டையும் செயல்படுத்தியுள்ளது என்றார் அவர்.

இந்த நீர் மாசுபாடு அடையாளம் காணப்பட்ட இடம் செமினி 2 நீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து 6.63 கிலோ மீட்டர் தொலைவிலும் புக்கிட் தம்போய் மையத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும் லபோஹான் டாகாங் சுத்திகரிப்பு மையத்திலிருந்து 31.9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.


Pengarang :