ECONOMYSELANGOR

இன்று மற்றும் நாளை தொழில் கார்னிவலில் 20,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன

ஷா ஆலம், ஜூன் 11: மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட மெகா வேலை வாய்ப்பு கார்னிவல் ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) மாநாட்டு மையத்தில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.

20,000 வேலை வாய்ப்புகளை வழங்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட முதலாளிகளின் பங்கேற்புடன் கார்னிவல் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

கும்புலான் பெராங்சாங், டைகின் மலேசியா சென்.பெர்ஹாட், டிஎச்எல் எக்ஸ்பிரஸ், டிஆர்பி ஹைக்கோம், ஜயண்ட் மலேசியா, மலாயான் பேங்கிங் பெர்ஹாட் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன.

மீடியா பிரிமா டிஜிட்டல், புரோட்டோன், பெரசாரானா மலேசியா பெர்ஹாட், ஷோப்பி மலேசியா, ஸ்போர்ட் டைரைக்ட் சென். பெர்ஹாட், டோயோட்டா ஆட்டோ போடி மலேசியா பெர்ஹாட் ஆகியவையும் வேலை வாய்ப்பினை வழங்கும் இதர நிறுவனங்களாகும்.

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிலாங்கூரில் வேலையின்மை விகிதத்தை 3.2 விழுக்காடாகக் குறைக்கும் நோக்கில் இந்த தொழில் கார்னிவல் நடத்தப்படுவதாக இளம் தலைமுறை மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக இயங்கலை மற்றும் பொது மக்களின் நேரடி பங்கேற்புடன் நடைபெற்ற இந்த கார்னிவல் இம்முறை பெரிய அளவில் நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.

மேலும் தகவல்களைப் பெற விரும்புவோர், www.SelangorJobportal.com.my என்ற அகப்பக்கத்தை நாடலாம்.


Pengarang :