ECONOMYSELANGORSMART SELANGOR

கேரி தீவு பொருளாதார மண்டலம் 115,000 வேலை வாய்ப்புகளுடன் RM400 கோடி ஈட்ட வல்லதும்.

ஷா ஆலம், ஜூலை 27: கேரித்தீவு, சிலாங்கூர் சிறப்புப் பொருளாதார மண்டலமாக நிறுவுவது  கிள்ளான் மாவட்டத்தில், கேரி தீவை, சிலாங்கூர்  மாநிலத்தின் தளவாடத் துறையின் வளர்ச்சியை வலுப்படுத்த, அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது.

தொழில்துறை, வணிகம், தளவாடங்கள், துறைமுகம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் ஆகியவை கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பைத் தூண்டுவதற்கும் நில பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான வளர்ச்சியை உள்ளடக்கியதாக இருக்கும் என டத்தோ மந்திரி புசார் கூறினார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த திட்டம் 2060ல் RM402 கோடியையும், 2045ல் RM470  கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் 115,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கிறார்.

“கேரி சிலாங்கூர் 6,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது, இங்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் உற்பத்தி, துறைமுகங்கள் மற்றும் தளவாடங்கள் மற்றும் விநியோக மையங்கள் போன்ற மூன்று முக்கிய தொழில்களில் கவனம் செலுத்தும்” என்று அவர் மாநில சட்டசபை சிலாங்கூரில் முதல் சிலாங்கூர் திட்டத்தை (RS-1) முன்வைக்கும்போது கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 விழுக்காடு பங்களிப்பை வழங்கும் தளவாடத் துறையில் பெரும் திறனைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே இத் திட்டம் செயல்படுத்தப் பட்டதாக அமிருடின் கூறினார்.

2020 ஆம் ஆண்டில் சிலாங்கூரில் 220,930 நபர்கள் பணியாற்றிய நிலையில், அஞ்சல் மற்றும் கோரியர் சேவைகள் கோவிட்-19 காலத்தில் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதை அவர்  சுட்டிக் காட்டி காட்டினார்.


Pengarang :