ALAM SEKITAR & CUACAECONOMY

விரைவான நடவடிக்கை வழி எண்ணெய் கசிவு  ஆற்றில் கலப்பதை தடுத்தது லுவாஸ்

ஷா ஆலம், ஜூலை 28: (லுவாஸ்) 24 மணி நேர மாசுபாடு கண்காணிப்பின் வழி வடக்குதெற்கு நெடுஞ்சாலையில் (பிளஸ்) KM 294.9  ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து  நீர் மாசுபடும் அபாயத்தை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது.

நிறுவனத்தின் கூற்றுப்படி, இன்று அதிகாலையில் ஒரு கார் மற்றும் லாரி இடையே நிகழ்ந்த ஒரு விபத்தில் ஏற்பட்ட   எண்ணெய் கசிவு அருகே உள்ள கால்வாய்கள் அல்லது நீர் ஆதாரங்களில் பாய விடாமல் தடுக்கப்பட்டது.

சுங்கை லங்காட்டில் இருந்து 30 மீட்டர் தொலைவில் சம்பவம் நடந்ததை கருத்தில் கொண்டு  நிலமை  மேலும் மாசடைவதைத் தடுக்க, லுவாஸ் மற்றும்  பிளஸ் நிறுவனமும் இணைந்து  சம்பந்தப்பட்ட பகுதியில் மரத் தூள்களை போட்டதாக லுவாஸ் விளக்கியது.

மேலும் லுவாஸ் விசாரணையில் விபத்து பகுதிக்கு அருகில் உள்ள கால்வாயில் மற்றும் அருகில் உள்ள நீர் ஆதாரங்களில் எண்ணெய் கலக்கவில்லை என்று கண்டறியப்பட்டது

இந்தச் சம்பவம் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டைப் பாதிக்காமல் இருப்பதற்கும், பயனர்களுக்கு நீர் விநியோகம் சீர்குலையாமல் இருப்பதற்கும் அவ்வப்போது நெருக்கமான கண்காணிப்பு தொடர்கிறதுஎன்று அவர் பேஸ்புக்கில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் நீர் வளத்திற்கு இடர்பாடுகள் ஏற்படுவதை  தடுக்க  நதிப் படுகையில் 24 மணி நேர கண்காணிப்பை செயல்படுத்துவதற்கு லுவாஸ் நிறுவனம் உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.


Pengarang :