ECONOMYEKSKLUSIF

ஹிஜ்ராவின் ஐந்து திட்டங்களில்  பங்கேற்று வர்த்தக நுணுக்கங்களை அறிந்து கொள்ள தொழில் முனைவோருக்கு வாய்ப்பு

ஷா ஆலம், ஆக 7- வர்த்தகம் தொடர்பான அறிவாற்றலை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐந்து திட்டங்களில் மீண்டும் பங்கேற்க தனது உறுப்பினர்களுக்கு யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

தொழில்முனைவோர் பயிற்சி, முகவர் மேலாண்மை, தொடர்பு ஒருங்கமைப்பு, வணிக வழிகாட்டி, நிதி நிர்வாகம் ஆகியவையே அந்த ஐந்து திட்டங்களாகும் என்று அந்த வர்த்தக கடனுதவி அமைப்பு தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஹிஜ்ரா தொழில்முனைவோர் வர்த்தகம் தொடர்பான அறிவாற்றலை மேலும் வளர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக பல்வேறு பயிற்சி மற்றும் வழிகாட்டி திட்டங்களை தாங்கள் ஏற்பாடு செய்துள்ளதாக அது தெரிவித்தது.

இந்த திட்டத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் https://docs.google.com/…/1FAlpQLSecN5Df2kRZcH…/viewform  என்ற அகப்பக்கம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்த அறிவாரியம் ஆலோசனை கூறியது.

தொழில்முனைவோர் தங்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஏதுவாக தொழில்முனைவோர் திசைகாட்டித் திட்டத்தையும் தாங்கள் ஏற்பாடு செய்துள்ளதாக அது குறிப்பிட்டது.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் ஹிஜ்ரா அறவாரியத்தின் ஏழு கடனுதவித் திட்டங்கள் வாயிலாக 4,113 தொழில் முனைவோர் 6 கோடியே 90 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளியைக் வர்த்தக கடனுவியாகப் பெற்றுள்ளனர்.

 

 


Pengarang :