ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

இரு அனைத்துலக விண்வெளி ஒப்பந்தங்களில் மலேசியா கையெழுத்து

கோலாலம்பூர், ஜூலை 7- நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை காக்கும் நோக்கத்தைக் கொண்ட ஐ.நா.வின் கீழுள்ள விண்வெளி சம்பந்தப்பட்ட ஐந்து அனைத்துலக ஒப்பந்தங்கள் அல்லது மாநாடுகளில் இரண்டில் மலேசியா கையெழுத்திட்டுள்ளது.

1967 ஆம் ஆண்டு சந்திரக் கிரகம் உள்பட அகண்ட வெளியின் ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளை நாடுகள் நிர்வாகிப்பது தொடர்பான ஒப்பந்தம் மற்றும் 1968 ஆம் ஆண்டு விண்வெளி வீரர்களை மீட்பது, விண்வெளி வீரர்கள் திரும்புவது, விண்ணில் ஏவப்பட்ட ஏவுசாதனங்கள் மறுபடியும் பூமிக்கு கொண்டு வருவது ஆகியவை தொடர்பான ஒப்பந்தம்  ஆகியவையே அவ்விரு ஒப்பந்தங்களாகும் என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது, அல்லது அந்த ஒப்பந்தத்தின் அல்லது மாநாட்டின் அங்கத்தினர் ஆவது ஆகியவை தேசிய நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகளாகும் என்று அது தெரிவித்தது.

கடந்த 1948 ஆம் ஆண்டு முதல் விண்வெளியை அமைதி நோக்கங்களுக்காக பயன்டுத்துவது மீதான ஐ.நா. குழுவின் உறுப்பினராக மலேசியா இருந்து வருவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜனவரி 25 ஆம் தேதி மலேசியா ஆர்ஜிதம் செய்த மலேசிய வான் வாரியச் சட்டம் 2022 இவ்விவகாரத்தில் மலேசியா கொண்டுள்ள கடப்பாட்டை புலப்படுத்தும் வகையில் உள்ளது.

 


Pengarang :