ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

பர்மிங்காம் காமன்வெல்த் 2022 போட்டியில் இரு தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கும் இந்தியர்களுக்கும்  பெருமை சேர்த்த தீனா முரளிதரனும், அர்ப்பணிப்புக்கு  அவர்களின்  பெற்றோர்களும்  பாராட்டுக் குறியவர்கள்

கிள்ளான் ஆகஸ்ட் 11 – பர்மிங்காம் காமன்வெல்த் 2022 போட்டியில் இரு தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கும் இந்தியர்களுக்கும் தனது தொகுதிக்கும் பெருமை சேர்த்த தீனா முரளிதரனை செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர்  மந்திரி புசாரின் சிறப்பு பிரதிநிதியுமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்  பாராட்டினார்.

இன்று மாலை 5.00மணிக்கு தீனாவின் வீட்டிற்கு சென்ற மாண்புமிகு குணராஜ் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டதோடு ஒரு பாராட்டு மலர் கொத்துடன் தனது சொந்த அன்பளிப்பையும் வழங்கி தீனா மென்மேலும் வெற்றிகளை குவிக்க தனது வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டார்.

தனது வெற்றி குறித்து குறிப்பிட்ட தீனா, இந்த வெற்றி எளிதில் கிடைத்த ஒன்றல்ல, தான 7 வயது முதல் பூப்பந்து விளையாட்டில் தொடர்ந்து பல ஆண்டுகள் பல போட்டிகளில் கலந்து விளையாடி வருவதாகவும், ஒவ்வொரு தோல்வியும் அடுத்த வெற்றிகான  அடித்தளமாக  கொண்டு போராட வேண்டும் என்றார். நம் இளைஞர்கள் போட்டி விளையாட்டுகளில் வெற்றி பெற விடா முயற்சியும்  உழைப்பும் கொண்டிருக்க வேண்டும்.

இதில் நம் பிள்ளைகளின் கடுமையான உழைப்பும் அதற்கு நம் பெற்றோர்களின் அர்ப்பணிப்பு இதுபோன்ற வெற்றிக்கு உதவுவதாக கூறி தீனாவின் பெற்றோர்களையும் பாராட்டினர் செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,  கோத்தா ராஜா கெ அடிலான் கட்சியின் தலைவருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்


Pengarang :