ECONOMYMEDIA STATEMENT

பெருந்தொற்றின் போது தொலைத் தொடர்பு வசதியை தவறாகப் பயன்படுத்தி பேரணிக்கு அழைத்த நபருக்கு அபராதம்

கோலாலம்பூர், ஆக 11- கடந்தாண்டு பெருந்தொற்று ஏற்பட்ட சமயத்தில் டிவிட்டர் மூலம் பேரணிக்கு வரும்படி அழைப்பு விடுத்ததன் மூலம் தொலைத் தொடர்பு வசதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் வேலையில்லா நபர் ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 7,000 வெள்ளி அபராதம் விதித்தது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை முகமது நுர் தவுபிக் அஸார் (வயது 27) ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி நோர் ஹஸ்னியா அப்துல் ரசாக் இத்தண்டனையை வழங்கினார்.

அபராதத்தை செலுத்தத் தவறினால் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி தீர்ப்பளித்திருந்த நிலையில் நுர் தவுபிக் அபராதத் தொகையை செலுத்தினார்.

கடந்தாண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி மாலை 4.44 மணியளவில் தனது டிவிட்டர் கணக்கின் மூலம் ‘சனிக்கிழமை கலவரம்? இறங்குவோம்‘ என்ற வாசகத்தை பதிவிட்டதன் மூலம் அவர் தொலைத் தொடர்பு வசதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


Pengarang :