ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

தீபாவளியை முன்னிட்டு பிற மாநிலங்களில் இருந்து பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய கபடி போட்டியை சிலாங்கூர் ஏற்பாடு செய்கிறது.

கிள்ளான், ஆகஸ்ட்14: தீபாவளி கொண்டாட்டத்தை ஒட்டி பிற மாநில அணிகள் பங்கேற்கும் கபடி விளையாட்டுப் போட்டி சிலாங்கூரில் இந்த அக்டோபரில் நடைபெறவுள்ளது.

கிள்ளான் நகரில் நடைபெறவிருக்கும் போட்டி பங்கேற்பாளர்களிடையே போட்டியை அதிகரிக்கும் என்று நம்புவதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“கபடி போட்டியின் அமைப்பு வயது வகைகளை உள்ளடக்கி  இருக்க நான் பரிந்துரைக்கிறேன். இது விளையாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு இது முக்கியமானது என்றும்  அவர் கூறினார்.

“இந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கு கூடுதலாக, ஜாலான் தெங்கு கெளானாவில் தீபாவளி பஜாரையும் நடத்துகிறோம். இந்த திருநாளின் போது ஒவ்வொரு முறையும் கிள்ளான் ஒரு பிரபலமான இடம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே,” என்று அவர் கூறினார்.

கிள்ளான் முஹிபா கிண்ண கபடிப் போட்டியை இன்று அண்டலாஸ் விளையாட்டுக் கூடத்தில் ஆரம்பித்து வைத்த பிறகு அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ, செந்தோசா மாநில சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி குணராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கிள்ளான் முஹிபா கோப்பையில் சரவாக் உட்பட மொத்தம் 20 அணிகள் போட்டியிட்டன. இதில் ஆண்கள் பிரிவில் சாம்பியனுக்கு 5,000 ரிங்கிட் ரொக்கமாக வழங்கப்பட்டது.


Pengarang :