ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

உணவகம் முன் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தையை பொது மக்கள் மீட்டனர்

 கோலாலம்பூர், ஆக 21- புதிதாக பிறந்த பெண் குழந்தை ஒன்று உலு சிலாங்கூர், உலு பெர்ணம், தாமான் பெஹ்தாராவிலுள்ள உணவம் ஒன்றில் எதிரே இருந்த சோபாவில் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

இன்று காலை 9.49 மணியளவில் அக்குழந்தையைக் கண்ட 33 வயது ஆடவர் ஒருவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்த தாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அர்ஷாட் கமாருடின் கூறினார்.

மருத்துவ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அக்குழந்தை ஆரோக்கியமாகவும் உடலில் காயங்கள் அல்லது விலங்குகளால் கடிபட்டதற்கான அறிகுறி ஏதுமின்றியும் காணப்பட்டதாக அவர் சொன்னார்.

அக்குழந்தையை கைவிட்டவர்களை தேடும் நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 317வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

அந்த குழந்தை சோபா ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதை சித்தரிக்கும் 43 விநாடி காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.


Pengarang :