Helikopter Z-8 milik China
MEDIA STATEMENTSMART SELANGOR

ஹெலிகாப்டரில் உல்லாசப் பயணம் செல்ல 1,000 பேர் முன்பதிவு

ஷா ஆலம், செப் 10- சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சியில் (எஸ்.ஏ.எஸ்.) முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் மூலம் உல்லாசப் பயணம் மேகொள்ளும் திட்டத்திற்கு பொது மக்களிடம் ஆமோக ஆதரவு கிட்டியுள்ளது.

இந்த கண்காட்சியின் முதல் நாள் தொடங்கி இன்று வரையிலான காலக்கட்டத்தில் இந்த உல்லாசப் பயணம் மேற்கொள்வதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக சிஸ்டமேட்டிக் எவியேஷன் செர்விசஸ் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி இடா அடோரா அஸ்ஹாரி இஸ்மாயில் கூறினார்.

பத்து நிமிட ஹெலிகாப்டர் பயணத்திற்கு 200 வெள்ளி கட்டணம் விதிக்கப்படுவதாக கூறிய அவர், இந்த பயணத்தின் போது மாநகரின் அழகை வானிலிருந்து காண்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார்.

இந்த கண்காட்சியில் எங்கள் நிறுவனத்தின் மூன்று ஹெலிகாப்டர்களை காட்சிக்கு வைத்துள்ளோம். அவற்றில் இரண்டு ஹெலிகாப்டர்கள் இந்த உல்லாச பயணத்திற்கு பயன்படுத்தப்படும். நேற்று இருபது பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றார் அவர்.

இந்த உல்லாசப் பயணத்திற்கான அனைத்து முன்பதிவுகளும் முடிந்து விட்டதாகவும் பதிவு செய்த அனைவரும் இன்றைக்குள் பயணம் மேற்கொள்வதை உறுதி செய்ய தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :