ECONOMYSELANGOR

தாமான் மேடானில் சிரமப்படும் 600 குடும்பங்கள் வருடத்திற்கு RM3,600 உதவிகளைப் பெறுகின்றன

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 14: சிலாங்கூர் வளமான வாழ்க்கை உதவி (பிங்காஸ்) திட்டத்தின் மூலம் தாமான் மேடான் சட்டமன்றத்தில் மொத்தம் 600 குடும்பத் தலைவர்கள் ஆண்டுக்கு RM3,600 உதவியைப் பெறுவார்கள்.

மாநில சட்டசபைஉறுப்பினர்ஷாம்சுல்பிர்டாவுஸ்முகமதுசுப்ரிகூறுகையில், இதுவரை 200க்கும்மேற்பட்டகுடும்பங்கள்  மாதம் 300 ரிங்கிட்செலவழிப்பதற்கு உதவி பெற்று வருகின்றனர்.

“நாங்கள் மாற்றுத் திறனாளிகளை கொண்ட சட்டமன்றங்களில் ஒதுக்கீட்டிலிருந்து, ஓரளவு வசதி கொண்ட பிரிவினரின் எஞ்சிய ஒதுக்கீடுகளை விண்ணப்பிக்க முயற்சிக்கிறோம். இந்த விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு சுமுகமாக செல்லும் என நம்புகிறேன்,” என்றார்.

பிங்காஸ் 44 ஊக்கத்தொகை களின் ஒரு பகுதியாகும் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் ஜூன் இறுதியில் தொடங்கப்பட்டது, RM10.8 கோடி ஒதுக்கீட்டில் 30,000 குடும்பங்கள் பயனடையும்.

ஆகஸ்ட் 1 அன்று, முதலீடு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம், பெறுநர்கள் எளிதாகச் செலவழிக்க, வேவ்பே இ-வாலட் மூலம் பிங்காஸ் பணம் விநியோகிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.


Pengarang :