ALAM SEKITAR & CUACAECONOMYPBTSELANGOR

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கோலக் கிள்ளானில் ஐந்து கால்வாய்கள் துப்புரவு- ஜே.பி.எஸ். நடவடிக்கை

ஷா ஆலம், செப் 21– வடகிழக்கு பருவமழை மற்றும் கடல் பெருக்கு போன்ற இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் கோலக் கிள்ளானில் உள்ள ஐந்து கால்வாய்களை ஆழப்படுத்தும் பணியை கிள்ளான் மாவட்ட வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை மேற்கொள்ளவுள்ளது.

பூலாவ் இண்டா, கம்போங் தெலுக் நிப்பா, ஜாலான் ஈக்கான் பாடாங், ஜாலான் ஊடாங் கெர்த்தாக், ஜாலான் ஈக்கான் தெங்கிரி, ஜாலான் ஈக்கான் யூ, ஜாலான் தாலி ஆயர், தெலுக் கோங் ஆகிய பகுதிகளில் இந்த துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

வெள்ள அபாயம் உள்ள இடங்களில் குறிப்பாக, பூலாவ் இண்டா பாரம்பரிய கிராமம், கம்போங் தெலுக் கோங் ஆகிய இடங்களில் உள்ள கால்வாய்களை துப்புரவு செய்யும் அதே வேளையில் வடிகால் முறையை சோதனையிடும்படி கிள்ளான் மாவட்ட வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறையை தாங்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக அஸ்மிஸாம் ஜமான்ஹூரி கூறினார்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் துப்புரவுப் பணிகளை தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாக ஜே.பி.எஸ். தங்களிடம் தெரிவித்துள்ளது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி அதிகாலை 6.52 மணிக்கு 5.3 மீட்டர் வரையிலும் மறுநாள் காலை 7.53 மணிக்கு 5.4 மீட்டர் வரையிலும் செப்டம்பர் 29ஆம் தேதி அதிகாலை 6.42 மணியக்கு 5.3 மீட்டர் வரையிலும் அலைகள் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :