ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

டிவிட்டர் வழி புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் மூன்று சாலைகள் சீரமைப்பு

ஷா ஆலம், செப் 24- பொது மக்களிடமிருந்து டிவிட்டர் வழி புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் மூன்று சாலைகளை சாலை பராமரிப்பு நிறுவனமான இன்ஃப்ராசெல் சென். பெர்ஹாட் சீரமைத்துள்ளது.

தங்கள் பகுதியில் உள்ள பழுதடைந்த சாலைகள் தொடர்பான புகார்களை  என்ற பதிவுடன்  டிவிட்டரில் பதிவேற்றம் செய்யும்படி அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது.

பொது மக்கள் டிவிட்டர் வழி அளித்த புகாரின் பேரில் இன்ஃப்ராசெல் நிறுவனம் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி சபாக் பெர்ணம் மாவட்டத்திலுள்ள ஜாலான் சாவா பன் சாலை, உலு சிலாங்கூரின் கெந்திங் ஹைலண்ட்ஸ் சாலை ஆகியவற்றை சீரமைப்பு செய்தது.

அதற்கு மறுநாள் பெட்டாலிங் மாவட்டத்தின் ஜாலான் ராடின் 1, கம்போங் பாயா ஜெராஸ் சாலை சீரமைப்பு செய்யப்பட்டது.

பழுதான சாலைகள் தொடர்பான புகார்களை டிவிட்டர் வழி தெரிவிக்கும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக பொது மக்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.


Pengarang :