ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கேம்பாக் செத்தியா தொகுதியில் 650 பேர் ஆண்டுக்கு வெ.3,600 உதவித் தொகை பெறுவர்

ஷா ஆலம், அக் 5- கோம்பாக் செத்தியா தொகுதியிலுள்ள வசதி குறைந்த பி40 பிரிவைச் சேர்ந்த 650 குடும்பங்களுக்கு பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3,600 வெள்ளி உதவித் தொகை வழங்கப்படும்.

அவர்களில் சுமார் 70 விழுக்காட்டினர் மாதம் 300 வெள்ளி உதவித் தொகையைப் பெறத் தொடங்கி விட்டதாக தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஏ. ரஹிம் காஸ்டி கூறினார்.

இந்த உதவித் திட்டத்திற்கு ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள்  கிடைத்தன. எனினும் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட கோட்டா அடிப்படையில் தான் உதவி பெறுவோர் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டது. இந்த உதவித் திட்டத்தில் பங்கேற்போரில் பெரும்பாலோர் பி40 தரப்பினராகவும் அதிக எண்ணிக்கையிலான குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்களாகவும் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

உண்மையில் சிரமத்தில் உள்ள குடும்பத்தினர் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவதை உறுதி செய்ய விரும்புகிறோம். ஆகவே, அனைத்து விண்ணப்பங்களையும் நாங்கள் நன்கு ஆய்வு செய்தோம் என்று சிலாங்கூர்கினியிடம் அவர் சொன்னார்.

கடந்த ஜூன் மாதம் தொடங்கப் பட்ட இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் 44 உதவித் திட்டங்களை மாநில அரசு அறிமுகப் படுத்தியுள்ளது. 

சுமார்  ஒரு கோடியே 80 லட்சம் வெள்ளி மதிப்பிலான இந்த திட்டத்தின் வாயிலாக 30,000 பேர் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :