ECONOMYSELANGOR

சிலாங்கூரில் போலி சொத்து விற்பனைக் கொள்முதல் நடவடிக்கை அம்பலம்

ஷா ஆலம், அக் 6- மாவட்ட மற்றும் நில அலுவலகங்களை உள்ளடக்கிய சொத்துடைமை விற்பனை கொள்முதல் நடவடிக்கையில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உள்பட பலரின் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட கும்பல் முயன்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் சிலாங்கூர் நில மற்றும் கனிமவள அலுவலகம் மற்றும் மாவட்ட நில அலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் என அத்தரப்பினர் கூறிக் கொள்வதோடு போலி கையெழுத்துடன் கூடிய சொத்து விற்பனை அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர் என்று மாநில நில மற்றும் கனிமவள அலுவலகம் கூறியது.

நில விற்பனைக் கொள்முதல் தொடர்பான நடவடிக்கைகளில் நில மற்றும் கனிமவள அலுவலகம் மற்றும் மாவட்ட நில அலுவலகத்தின் ஓய்வு பெற்ற மற்றும் நடப்பு உயர் அதிகாரிகளின் அக்கும்பல் பயன்படுத்துவதோடு போலி வாக்குறுதிகளையும் அளித்துள்ளன என அது தெரிவித்தது.

இந்த மோசடிக் குற்றச் செயல்கள் தொடர்பில் போலீசில் தமது தரப்பு புகார் செய்துள்ளதாக அந்த அலுவலகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

சொத்துகளை வாங்க விரும்புவோர் இந்த மோசடிக் கும்பலின் வலையில் விழாதிருக்க மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அது அறிவுறுத்தியது.


Pengarang :