ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHNATIONAL

சிப்ஸ் 2022 மாநாடு- அனைத்துலகத் தரத்தில் மகத்தான தொடக்கம்- டத்தோ தெங் வர்ணனை

கோலாலம்பூர், அக் 8 – சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு (சிப்ஸ் 2022) 2  முதன் முறையாக கடந்த 2015 இல் நடத்தப்பட்டதிலிருந்து பங்கேற்பாளர்கள் மற்றும் வருகையின் அடிப்படையில் பிரமிக்கத்தக்க எண்ணிக்கையுடன் மிகச் சிறந்த தொடக்கத்தைப் பெற்றுள்ளது.

கடந்த 6 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த பேராளர்களின் எண்ணிக்கை  உற்சாகத்தையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக முதலீடு, தொழிலியல் மற்றும் வர்த்தகத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இதுவரை, இந்த நிகழ்வு மிகவும் உற்சாகமளிக்கும் வகையில் இருந்ததுகுறிப்பாக பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையில் பல சாதனைகளை முறியடித்துள்ளோம். இந்த மாநாட்டில்  623 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதோடு இதுவரை இல்லாத அளவுக்கு அதாவது 906 கண்காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த சில நாட்களில்  இந்த நிகழ்விற்கு அதிக வர்த்தகர்களும் பார்வையாளர்களும் வருவார்கள் என நம்புகிறோம்.  மேலும் அதிக ஒப்பந்தங்கள் இங்கு கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கிறோம்  என்ன்றார் அவர்.

இந்த மாநாட்ட்டில் ஜி.டி. மசாலா ஸ்பைஸ் மெனுபெக்சரர்ஸ் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் தயாரிப்பு பொருள்களை அறிமுகப்படுத்தியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இம்மாதம் 9ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் இந்த மாநாட்டின் வாயிலாக 35 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீட்டை பதிவு செய்யவும் 30,000 வருகையாளர்களை ஈர்க்கவும் முடியும் என மாநில அரசு எதிர்பார்க்கிறது.

 


Pengarang :