ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

நேற்று 1,788 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு- மூவர் உயிரிழப்பு

ஷா ஆலம், அக் 8- நாட்டில் நேற்று 1,788 பேர் கோவிட்-19 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 1,794 ஆக இருந்தது.

நேற்று நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் அறுவர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் இந்நோய்க்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 48 லட்சத்து 51 ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கோவிட்-19 தொற்று தொடர்புடைய மூன்று மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து இந்நோய்க்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,394 ஆக உயர்வு கண்டுள்ளது.

கோவிட்-19 நோயிலிருந்து நேற்று 1,509 பேர் குணமடைந்தனர். இதன் வழி இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 47 லட்சத்து 91 ஆயிரத்து 625 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வரை இந்நோயின் தீவிர தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,877 ஆக இருந்தது. அவர்களில் 22,859 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 980 பேர் மருத்துவமனைகளிலும் 38 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :