ECONOMYMEDIA STATEMENTSELANGOR

அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை நாள், நேரம் மாற்றம்- பி.கே.பி.எஸ். அறிவிப்பு

ஷா ஆலம், அக் 16- சிலாங்கூர் விவசாயக்  மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.)     ஏற்பாடு செய்துள்ள அத்தியாவசிய உணவுப் பொருள் விற்பனை நேரம் மற்றும் நாட்கள் நாளை முதல் மாறுகிறது.

ஒவ்வொரு சனி முதல் வியாழன் வரையிலும் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அடிப்படை பொருட்களின் மலிவான விற்பனை நடைபெறும் என்று முகநூல் மூலம் அக்கழகம்  தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை எங்கள்  விடுமுறை நாள். நாங்கள் உங்களுக்காக பொருட்களை 'மீண்டும்' தயார் செய்யவேண்டியுள்ளது என அது தனது முகநூல் பதிவில் கூறியது.

கவலை வேண்டாம், விற்பனை இன்னும் அமலில் உள்ளது. விற்பனை நேரம் மட்டும் மாறுபடுகிறது.நன்றி.  சிலாங்கூர் மக்களுக்கான இந்த முயற்சியை தொடர்ந்து ஆதரிக்கவும் என்று அவர் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் நடுத்தர கோழி 10.00 ரிங்கிட்டுக்கும் பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 ரிங்கிட்டுக்கும் மீன் ஒரு பாக்கெட் 6.00 ரிங்கிட்டுக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 ரிங்கிட்டுக்கும் விற்கப்படும்.

இந்த அத்தியாவசிய பொருள் மவிவு விற்பனை கடந்த ஆகஸ்டு 31 ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மாநிலத்தின் 56 சட்டமன்றங்களில் உள்ள 260 இடஙகளில் இந்த மலிவு 
விற்பனை நடத்தப்படுகிறது.
சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த மலிவு விற்பனையின் வழி இதுவரை 80,000 பேர் வரை பயனடைந்துள்ளனர்.

ஏசான் ரக்யாட்  மலிவு விற்பனை பயணம் பற்றிய தகவலை https://linktr.ee/myPKPS 
என்ற அகப்பக்கம் மூலமும் பெறலாம்.

Pengarang :