Kelihatan bendera merah diletakkan dan sebuah bot Angkatan Pertahanan Awam (APM) melakukan pemantauan supaya orang ramai tidak melakukan aktiviti di pesisir pantai berikutan air pasang ketika tinjauan di Pantai Baru Morib, Banting pada 19 September 2020. Foto BERNAMA
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

கடுமையான கடல் பெருக்கு அபாயம்- விழிப்புடன் இருக்க கிள்ளான் மக்களுக்கு அறிவுறுத்தல்

ஷா ஆலம், நவ. 23 - கிள்ளான் வட்டாரத்தில் நேற்று  தொடங்கி வரும் 27ஆம் தேதி வரை வெள்ளப்பெருக்கு ஏற்பட கூடும் என்பதால் கிள்ளான் மாவட்டத்தில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இப்பகுதியில்  நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 ஆம் தேதிகளில் கடல் மட்டம் 5.3 மீட்டர் அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கிள்ளான் மாவட்ட  மற்றும் நில அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மைக் குழு முகநூல் வழியாக வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியது.

எனவே, கிள்ளான் குடியிருப்பாளர்கள் எப்போதும் விழிப்புடன் தற்போதைய சுற்றுச்சூழல் நிலை குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அதேசமயம், வானிலை பற்றிய சமீபத்திய தகவல்கள் மற்றும்  மேலதிக வழிமுறைகளைப் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும் எனவும் அது நினைவூட்டியது.

Pengarang :