ECONOMYSELANGORSMART SELANGOR

பொது போக்குவரத்து வசதியை அதிகரிக்க விவேக தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்

ஷா ஆலம், நவ 29- பொது போக்குவரத்து சூழலுக்கு விவேக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முயற்சியானது பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிப்பதற்கான சிலாங்கூர் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக விளங்குகிறது.

இந்த வசதிகளை மறுபெயரிடும் நடவடிக்கையை முன்னெடுப்பதை சிலாங்கூர் மோபிலிட்டி எனப்படும் பொது போக்குவரத்து முறை நோக்கமாக கொண்டுள்ளது என்று போக்குவரத்து துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இந்த சிலாங்கூர் மோபிலிட்டி இரயில், பேருந்து, டாக்சி மற்றும் இ-ஹெய்லிங் எனப்படும் மின்-வாடகைக் கார் போக்குவரத்தை மட்டும் மையமாக கொண்டிருக்கவில்லை. மாறாக, விவேக தட செயலி மூலம் செயல்படும் மின்-ஸ்கூட்டர்கள், பாதசாரிகளுக்கான நடைபாதை, போக்குவரத்து வேன் போன்ற நுண் போக்குவரத்தையும் உள்ளடக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிப்பதில் மாநில அரசு ஆக்ககரமான மற்றும் தீவிர பங்கினை ஆற்ற முடியும் என்பதற்கு ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவைத் திட்டத்தின் வெற்றி சிறந்த உதாரணமாக விளங்குகிறது என அவர் சொன்னார்.

சிலாங்கூரில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பொது போக்குவரத்து முறையை மேலும் ஆக்ககரமானதாக ஆக்குவதன் மூலம் மக்களின்  வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மாநில அரசு கடப்பாடு கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.


Pengarang :