ECONOMYNATIONAL

அமைச்சரவை உறுப்பினர் பட்டியல் தயாரிப்பு பணி இறுதிக்கட்டத்தில்- அன்வார் தகவல்

கோலாலம்பூர், டிச 2- அமைச்சரவை உறுப்பினர்கள் பட்டியலைத் தயாரிப்பது தொடர்பான விவாதங்கள் முற்றுப் பெறும் தருவாயில் உள்ளதோடு வெகு விரைவில் அப்பட்டியல் வெளியிடப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் தாம் இன்று காலை மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவை சந்திக்கவுள்ளதாக அவர் சொன்னார்.

நேற்றிரவு காஜாங், சுங்கை லோங்கில் நடைபெற்ற ரிபோர்மாசி நட்புறவு கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவை பிரதமர் அன்வார் இன்று காலை இஸ்தானா கிந்தாவில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர், தஞ்சோங் ரம்புத்தான் சந்தையை பார்வையிடுவார். அதன் பின்னர் அவர் மஞ்சோய் சுகாதார கிளினிக் கட்டுமானப் பகுதிக்கு வருகை புரிவதோடு ஈப்போ, தாமான் ஜாத்தி அல் ஃபாத்தே பள்ளிவாசலில் நடைபெறும் வெள்ளிக்கிழமை தொழுகையிலும் மக்கள் விருந்துபசரிப்பிலும் கலந்து கொள்வார்.


Pengarang :