NATIONAL

இன்ஃப்ராசெல் பத்தாங் காலி நிலச்சரிவு பகுதிகளில் கேன்வஸ் பொருத்துகிறது

ஷா ஆலம், டிச 21: பத்தாங் காலியில் நிலச்சரிவு நிகழ்ந்ததைத் தொடர்ந்து சாலை ஓர சரிவுகளில் இன்ஃப்ராசெல் எஸ்டிஎன் பிஎச்டி (இன்ஃப்ராசெல்) அங்கு கேன்வஸ் பொருத்தியது.

மேலும் சாலைகளை ஒட்டிய இடிந்த பகுதியில் கற்களைக் கொட்டும் பணியையும் மேற்கொண்டதாக மாநிலச் சாலை பராமரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலச்சரிவு அபாயத்தைக் குறைக்கச் சரிவுப் பகுதி செக்ஷன் 13.200லும் இன்ஃப்ராசெல் கேன்வாஸைப் பொருத்தியது. இப்பணி காலை மணி 10 தொடங்கி மதியம் மணி 12.40 அளவில் நிறைவடைந்தது.

பத்தாங் காலி நிலச்சரிவில் 61 பேர் உயிர் பிழைத்துள்ளனர். மேலும், காணாமல் போன 7 பேரை தேடும் நடவடிக்கை இன்னும் தொடர்கிறது.


Pengarang :