NATIONAL

மக்காவ் ஸ்கேம் சிண்டிகேட்டால் மூதாட்டி ஒருவர் 1,40,000 ரிங்கிட் இழந்துள்ளார்

ஈப்போ, ஜன. 18: மக்காவ் ஸ்கேம் சிண்டிகேட்டால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவருக்கு
1,40,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது.

மன்சோங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி நோர் ஓமர் சப்பி கூறுகையில், 66
வயதான மற்றும் வேலையில்லாத மூதாட்டி இந்த சம்பவம் தொடர்பாக நேற்று
காவல்துறையில் புகார் அளித்தார்.

தன்னை 'புவான் ரோஹானி' மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர் என்றும்
அறிமுகப்படுத்திய சந்தேக நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகக்
அம்மூதாட்டி தெரிவித்தார். அந்த நபர் பாதிக்கப்பட்ட மூதாட்டி பணமோசடி வழக்கில்
தொடர்புடையவர் என்றும் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும்
பயமுறுத்தியுள்ளார்.

“கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சந்தேக நபரால் தான்
ஏமாற்றப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட மூதாட்டி கூறியுள்ளார். நேற்று அவர் தன் வங்கி
கணக்கைச் சோதனை செய்த போது அதில் பணம் குறைந்திருப்பதைக் கண்டறிந்தார்”
என்றும் ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தபுங் ஹாஜி கணக்கிலிருந்து வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றுமாறும்,
பின் அந்த வங்கிக் கணக்கின் தகவல்களைத் தன்னிடம் கொடுக்குமாறும் மூதாட்டியிடம்
கூறியுள்ளார் என்று ஓமர் தெரிவித்தார்.

இதற்கிடையில், மன்சோங் மாவட்டத்தில் கடந்த ஆண்டு முழுவதும் RM2.4 மில்லியன்
ரிங்கிட் சம்பந்தப்பட்ட 87 மக்காவ் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக நோர் ஓமர்
கூறினார்.

மக்காவ் ஊழல் மோசடியின் செயல் முறைகளில் ஒன்று, சட்ட அமலாக்கம், காவல்துறை,
IRB (உள்நாட்டு வருவாய் வாரியம்), MACC (மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம்),
நீதிமன்றங்கள் மற்றும் நிதி துறை அதிகாரிகள் என்று கூறி பொதுமக்களைத்
தொடர்புகொள்வது ஆகும் என்று காவல்துறையினர் கண்டறிந்தனர்.

“தெரியாத நபர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்க வேண்டாம்
என்றும், வங்கித் தகவல்களை எந்த தரப்பினருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்றும்
மக்களுக்கு நினைவூட்டப்படுகிறது, “ என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :