ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

குப்பை அகற்றும் லோரி சம்பந்தப்பட்ட விபத்து- கே.டி.இ.பி.டபள்யூ.எம் காவல் துறையிடம் ஒத்துழைக்கும்

ஷா ஆலம், ஜன 21- சிப்பாங், கோத்தா வாரிசான் பகுதியில் நேற்று மாலை நிகழ்ந்த பல வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் தங்களது துணைக் குத்தகையாளரின் குப்பை அகற்றும் லோரியும் சம்பந்தப்பட்டுள்ளதை கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியது.

இந்த விபத்தில் உயிருட்சேதம் ஏற்படவில்லை எனக் கூறிய அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி முகமது தாஹிர், இச்சம்பவம் தொடர்பில் சிப்பாங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதோடு விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

இவ்விவகாரத்தில் கே.டி.இ.பி.டபள்யூ.எம். நிறுவனம் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கும். இந்த விபத்துக்கு அலட்சியப் போக்கு காரணமாக இருந்தால் எந்தத் தரப்பினருடனும் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்த விபத்தின் காரணமாக இதர வாகனமோட்டிகளுக்கு ஏற்பட்ட அசெகளர்யத்திற்கு தாங்கள் மன்னிப்பு கோருவதாக கூறிய அவர், அவர்களுக்கு உதவிகள் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க தாங்கள் தயாராக உள்ளதாகச் சொன்னார்.


Pengarang :